ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமாகிய தோழர் தேவா அவர்கள் கடந்த 25.03.2023 அன்று தனது 70 வது வயதில் எமை விட்டுப் பிரிந்தார். 1983 இலிருந்து சுவிஸ் இல் தொடர்ச்சியாக வேலைசெய்து, பின் ஓய்வுபெற்று தான் பிறந்த மன்னார் மண்ணுக்கு திரும்பி வாழ்ந்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், டொச் (ஜேர்மன் மொழி), சிங்களம் ஆகிய மொழிகளில் ஆழமான புலமையுடையவராக இருந்தார். நீண்ட இழுத்தடிப்புகளோடு குழந்தைப் போராளிகள் என்ற நூலை சுவிஸிலிருந்தபோது முதல் நூலாக வெளிக்கொணர்ந்த அவர் இலங்கையில் இருந்தபோது அம்பரயா, அனொனிமா, நீண்ட காத்திருப்பு, என் பெயர் விக்டோரியா போன்ற முக்கியமான நூல்களை தமிழுக்குப் பெயர்த்திருந்தார். அவரது மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. தோழர் தேவாவுடனான நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.
Continue reading “தோழர் தேவா- நினைவுக் குறிப்பு”Month: March 2023
அந்தரம்
நாவல் அறிமுகம்
இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல்.
Continue reading “அந்தரம்”எங்கே போய் முடியப்போகிறது
Continue reading “எங்கே போய் முடியப்போகிறது”ஜோன் மெயர்ஷைமர் அமெரிக்காவின் ஒரு அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும் சர்வதேச உறவுகளுக்கான நிபுணரும், சிக்காக்கோ பல்கலைக் கழக பேராசிரியரும் ஆவர். அரசியல் சிந்தனையில் தாக்கம் செலுத்துகிற சிந்தனையாளர்களில் இவர் முக்கியமானவர். உக்ரைன் ரசிய பிரச்சினை குறித்து அவர் 2008 இலிருந்தே பேசிவருகிறார். அவர் உட்பட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் போன்ற சிந்தனையாளர்கள் பலரும் உக்ரைன்-ரசிய யுத்தம் ஓராண்டு என்பதை மறுக்கிறார்கள். 2014 இலிருந்து அது தொடங்கிவிட்டதாகவும் அது ஒன்பதாவது ஆண்டில் காலடி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்


