சூரிச் இல் [18-Oct-2009]

கடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று சூரிச் இல் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,
“இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்”
என்ற தலைப்பில் சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார்.