அறிமுகமும், கலை இலக்கிய ஒன்றுகூடலும்
நேரம் 3 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம். சிறிய சந்திப்பகளிலிருந்து பெரும் சந்திப்புகளை நடத்துவதற்கான மண்டபங்களைக் கொண்டது இந்த போல்க்ஸ் கவுஸ். தமிழ்க் கடைகள் அவ்வப்போது மலிவுவிற்பனை மண்டபமாக இதை மாற்றுவதுண்டு. இங்குள்ள தமிழர்களுக்கு மலிவு விற்பனை நடக்கிற இடம் என்று அறிமுகப்படுத்திவிடுவது சுலபமாகக்கூடப் போய்விடுகிறது. பெரும்திரளாய்க் கூடுவர்… போவர்…வருவர் மலிவுவிற்பனைக்கு.