Landscape photoS 2025

01.01.2025 (swiss)

*

01.07.2025 (Tessin,swiss)

*

23.07.2025 (Santis Mountain, swiss)

சன்ரீஸ் மலை சுவிஸின் வடகிழக்கில் அமைந்துள்ள அல்ப்ஸ் மலைத் தொடரின் உச்சிகளில் ஒன்று. 2502 மீற்றர் உயரமுள்ள இந்த மலை உச்சியில் நின்று சுவிஸ் உட்பட 6 நாடுகளினை -அங்கு பொருத்தப்பட்டிருக்கிற- தொலைநோக்கி ஊடாக கண்களால் எட்டித் தொட முடியும். சுவிஸ், ஜேர்மனி, அவுஸ்திரியா, லிக்ரன்ஸ்ரைன், பிரான்ஸ், இத்தாலி என்பனவே கண்களின் பார்வை வலைக்குள் அகப்படும் அந்த நாடுகளாகும். எப்போதும் காலநிலை இதைக் காண இடம் கொடுப்பதில்லை. நாம் சென்றிருந்த (23.07.2025) அன்று உச்சியை புகார் படையெடுத்து மூடிவிட்டிருந்தது. அதனால் 360 பாகையில் காட்சிகளை விரித்துக் காத்திருக்கும் அந்த மலையின் உச்சியைத் தாண்டி பார்வை ஊடுருவ முடியாமல் முடங்கிவிட்டது. என்றபோதும் அதற்கும் ஓர் அழகு இருக்கிறது பார் என கமரா சொல்லிக் கொண்டிருந்த பொழுதின் காட்சிகள் இவை.

*

19.08.2025 – Rhinefall நீர்வீழ்ச்சி

றைன் நதியின் பிறப்பிடம் சுவிஸ் இன் Graubunden கன்ரோனிலுள்ள Toma ஏரி ஆகும். ‘லெப்பொன்ரைன்’ அல்ப்ஸ் மலைத் தொடரின் ‘பிற்ஸ் பாடுஸ்’ பள்ளத்தாக்கில் இந்த ஏரி அமைந்திருக்கிறது. மிக அமைதியானதும் பிரமாண்டமற்றதுமான இந்த ஏரி Schaffhausen நகரத்திலிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பழைய கோட்டை அருகில் பிரமாண்;ட எடுப்பாய் குதித்து ஓடுகிறது. ஐரோப்பாவின் மிகப் பெரும் நீர்வீழ்ச்சியாக இருக்கிறது. இது சுமார் 15’000 வருடங்கள் வயது கொண்ட இளம் நீர்வீழ்ச்சி எனப்படுகிறது. 23 மீற்றர் உயரமும், 150 மீற்றர் அகலமும் 13 மீற்றர் ஆழமுமாக நீர் கவிழ்ந்து கொட்டுகிறது. கோடை காலத்தில் செக்கனுக்கு சராசரியாக ஆறு இலட்சம் இலீற்றர் கொள்ளளவுள்ள நீர் குதித்து ஓடுகிறது. மிக அருகில் நின்று இந்த நீர்வீழ்ச்சியை காண வசதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நீரோட்டத் தாக்குதலை எதிர்த்து நடுவில் பெரும் பாறையொன்று இருக்கிறது. அதன் உச்சியில் நின்று சில்லிடும் உணர்வை மீட்டு இயற்கையை அனுபவிக்க முடியும். சுவிஸில் தொடங்கும் இந்த றைன் நதியானது லிக்ரன்ஸ்ரைன், அவுஸ்திரியா, ஜேர்மனி நாடுகளை ஊடறுத்து ஓடிச் சென்று நெதர்லாந்தின் வட கடலுக்குள் சங்கமமாகிறது

*

AUTUMN 2025