இறந்த கடற்கரை
2009 இறுதிப் போரில் நடந்த இனப்படுகொலையின் எச்சங்கள் இந்த மண்ணுக்குக் கீழே புதையுண்டு இருக்கும். மேலே காற்றும் மழையும் இந்த கடற்கரை மண்ணை வாரிக் கொட்டி அதன் எச்சங்களை காட்டியபடியே இருக்கிறது. இப் படங்கள் 2024 ஆவணியில் எடுத்தவை. அதாவது 15 வருடங்களின் பின் எடுத்தவை. நாம் அங்கு நின்றிருந்த நாளில் இதை பார்வையிட வந்திருந்தவர்களில் சிங்கள மக்கள் அதிகமாக இருந்தனர். எவரையும் அந்த வெண்மணல் கடற்கரை கொண்டாடி மகிழ வைக்கவில்லை. அமைதியாகவே நின்றார்கள். அலையில் கால் நனைக்கக்கூட விருப்பம் இருக்கவில்லை. ஓர் இறந்த கடற்கரையாக காட்சியளித்தது.





























