முதல் பரிசு-2017

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு “புலம்பெயர் இணைய வலைப் பதிவர்-2017” தேர்வுப் போட்டியில் சுடுமணல் முதல் பரிசு பெறும் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. எனக்கே தெரியாமல் எனது வலைப்பதிவு போட்டிக் களத்துள் முகமறியா வாசகர் ஒருவரால் கொண்டுசெல்லப்படதை இன்னொரு பரிசாகக் கொள்கிறேன். அக்கறையெடுத்து சுடுமணலை முன்மொழிந்த முகமறியா வாசகர் அருந்தாவுக்கும், முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்த காக்கைச் சிறகினிலே சிறுபத்திரிகைக்கும், அதன் வாசகர்களுக்கும் எனது புன்னகை நன்றி !

(பரிசுத்தொகை முழுவதும் (ரூபா10000) “காக்கைச் சிறகினிலே” இலக்கியப் பணிக்காக திருப்பியளிக்கப்பட்டது)