2020
80 களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்ட ஒரு கீழ்மட்டப் போராளியான எனது ஏமாற்றங்களையும் அவலங்களையும் சொல்லும் ஓர் அரசியல் நாவல். இது ஓர் உண்மைக் கதை.

copy right : ravindran.Pa & Vidiyal Pathippagam
*
2002
பெண் படைப்பாளிகளின் தொகுப்பு

copy right: oodaru & vidiyal pathippagam
*
1997
PLOT அமைப்பினுள் நடந்த அராஜகங்களை அம்பலப்படுத்திய நாவல்.
அவசியம் வாசிக்க வேண்டிய ஓர் அரசியல் நாவல்.
தீப்பொறி (தமிழீழ மக்கள் கட்சி) யினால் விடியல் பதிப்பகத்தினூடக வெளியிடப்பட்ட இரண்டாவது பதிப்பு இது.
(ஏற்கனவே 1985 இல் இதன் முதலாவது பதிப்பையும் தீப்பொறி குழுவே வெளியிட்டிருந்தது. அன்றைய புளொட் அமைப்பினால் தீப்பொறி தோழர்கள் தேடப்பட்டுக்கொண்டிருந்த அராஜக சூழ்நிலையில் இப் பிரதிகள் மறைமுகமாகவும் இரவோடு இரவாகவும் அநாமதேயமாக விநியோகிக்கப்பட்டன. பின்னர் பாரிசில் தோழர் சபாலிங்கம் இதை போட்டோ கொப்பி பிரதியெடுத்து நூலாகக் கட்டி தன்னாலியன்றளவு பரவலாக்கியிருந்தார்.)

copy right: vidiyal pathippagam
*
2011 & 2017
ஈழப் போர்க் களத்திலும் போராட்டக் களத்திலும் நின்ற 26 தமிழீழ விடுதலைப் புலிப் பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு இது.

copy right: oodaru & vidiyal pathippagam
*
1995
// இது எனது கவிதைத் தொகுதி. சுமார் 5 ஆண்டுகால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் -இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதிவாழ்வு என்பன உணர்வு நிலையில் -இந் நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே- என்னைப் பாதிக்கிறது. இவற்றை கவிதையில் பதிவுசெய்வது திருப்தி தருகிறது.//

copy right: Ravindran.Pa & vidiyal pathippagam
*
2007
மலையகப் பெண் கவிஞைகளின் தொகுப்பு
இத்தொகுப்பில் 47 பெண்படைப்பாளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இக் கவிதைகள் மலையகத்திலிருந்து வெளிவந்த பல சஞ்சிகைகளிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
வெளியீடு : ஊடறு

copy right: oodaru & vidiyal pathippagam
*
1999
தயாநிதியின் உழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் நோர்வேயிலிருந்து வெளிவந்த புலம்பெயர் பெண்கள் சஞ்சிகையான “சக்தி”யின் முதலாவது வெளியீடு இச் சிறுகதைத் தொகுதி.
புலம்பெயர் இலக்கிய உலகில் வெளிவந்த சஞ்சிகைகளான சக்தி, தூண்டில், ஊதா, அ.ஆ.இ, தேனீ, பெண்கள் சந்திப்புமலர், இன்னொருகாலடி, புலம், எக்ஸில், உயிர்நிழல், தோற்றுத்தான் போவோமா போன்ற சஞ்சிகைகளிலிருந்து இச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறது சக்தி.

copy right: sakthi (norway)
*
2007
ஊடறு இணையத்தளத்திற்கு வந்துசேர்ந்த 35 கவிஞைகளின் கவிதைகள் -ஊடறுவில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும்; ஒழுங்கிலும் வடிவமைப்பு க்கு இசைவாகவும்- மை தொகுப்பாக்கப்படுகிறது.
பெண்நிலையில் நின்று சொல்லப்பட வேண்டிய சேதிகளை, போர்ச்சூழல் சுமத்தியுள்ள சுமைகளை, வேதனைகளை, அவர்களது உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக் கவிஞைகள் பேச முனைந்துள்ளனர்.

copy right: oodaru & vidiyal pathippagam