Archive for the ‘மொழிபெயர்ப்பு’ Category
The bravest Woman Malalai Joya
Posted July 16, 2016
on:ஒரு நேர்காணல்.
இவ் வருடம் மார்ச் மாதம் டென்மார்க் நாட்டுக்கு மலாலாய் ஜோயா வந்திருந்தார். 28 ஆடி 2016 இல் டெனிஸ் சஞ்சிகையான Gaia and Opinionen இற்காக டென்மார்க்கில் கல்விகற்கும் பல்கலைக்கழக மாணவனான Masih Sadat என்பவரால் எடுக்கப்பட்ட பேட்டியின் தமிழாக்கம் இது.
தமிழில் : ரவி
ஆப்கானின் “துணிகரமான பெண்மணி” என வர்ணிக்கப்படுபவர் மலாலாய் ஜோயா. 2005 இல் ஆப்கானின் -மேற்குலக செற்றப்புடன் அமைக்கப்பட்ட- பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராக இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துணிகரமான செயற்பாட்டாளர். அவர் அமெரிக்கா உட்பட மேற்குலகின் மீது கறாரான விமர்சனங்களை பொதுவெளியில் வைப்பவராக தொடர்ந்து இயங்குகிறார். அதனால் அவர் நோபல் பரிசுக்கு ‘உரியவரல்ல’. மேற்குலகால் விளம்பரப்படுத்தப்பட்ட Malala Yousafzai அவர்களைத் தேடி வந்ததுது போல மலாலாய் ஜோயாவை நோபல் பரிசு (இப்போதைக்கு) தேடி வராது. சமூக அரசியல் தளத்தில் செயற்படும் மலாலாய் ஜோயா Raising my voice என்ற நூலையும் எழுதியிருக்கிறார். 2010 இல் ரைம் சஞ்சிகை வெளியிட்ட உலகில் தாக்கத்தைச் செலுத்திய நூறு பேரின் வரிசையில் மலாலாய் ஜோய் உம் இடம்பெற்றுள்ளார்.
இராணுவப் பயிற்சி வக்கிரம்
Posted March 22, 2014
on:பாடசாலை முடிந்து பிள்ளை பரீட்சை பெறுபேறுடன் வீட்டுக்கு வருகிறது. அது தன்னளவில் திருப்பதியடைந்தோ அல்லது திருப்திப்படாமலோ வருகிறது. அதைவிட அக் குழந்தையிடம் தனது பெற்றோரின் அலசல் முறையில் பயம் மேலிடுகிறது. பக்கத்துவீட்டு சக மாணவர்களின் புள்ளிகளை விசாரித்து தனது குழந்தையின் திறமை அல்லது திறமையின்மைமீது தீர்ப்பு வழங்கும் மனோபாவம்தான் அது.
யுத்தத்தையல்ல, நான்
சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்…
பசித்திருக்கும் குழந்தைகளையும்
உருவழிந்த பெண்களையும் மட்டுமல்ல
ஊமைகளாக்கப்பட்ட மனிதர்களையும் நான்
பார்க்க விரும்பாததால்…
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும். Read the rest of this entry »