Archive for the ‘முகநூல் குறிப்பு’ Category
- In: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான்.
Read the rest of this entry »- In: அறிமுகம் | இதழியல் | முகநூல் குறிப்பு | விமர்சனம்
- Leave a Comment
பரதன் நவரத்தினம் – பாரதி சிவராஜா – மீராபாரதி – புதியவன் – தேவன் – மாலினி – புதியமாதவி – அரியநாச்சி – டேவிட் கிருஸ்ணன் – அம்பை – சண் நரேந்திரன் – கௌதம சித்தார்த்தன் – சந்திரா நல்லையா – தேவா – கருணாகரன் – அசுரா நாதன் – சிவச்சந்திரன் சிவஞானம் – பா.செயப்பிரகாசம் – யசோதா பத்மநாதன் – வாசன் – சுரேகா – நிரோஜன் சதாசிவம் – இராகவன் (இலங்கை) – க.பத்திநாதன் – குமணன் – நிலாந்தி – ஜெகநாதன் சற்குரு – எஸ்.கே.விக்னேஸ்வரன் – அகரன் பூமிநேசன் – பரமநாதன் தவநாதன்– முகுந்தன் குணரட்ணம் – சுசீந்திரன் நடராஜா – கருணாகரமூர்த்தி – எம்.கே.முருகானந்தன் – சரவணன் மாணிக்கவாசகம்
Read the rest of this entry »நிகழ்காலத் துயரம்
Posted April 17, 2020
on:உதவ முன்வருவோம் !
Posted April 5, 2020
on:அழிந்து போகுமா?
Posted February 10, 2020
on:பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.
இனி கடுப்பேத்த முடியாது!
Posted October 10, 2019
on:- In: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
கலைஞன் சண்முகராஜாவுடனான சந்திப்பு – சுவிஸ்
பாடசாலை மாணவனாக இருக்கும்போது இரவில் ரியூசன் முடிந்து சைக்கிளில் டபிள் வருகிறோம், நானும் நண்பனும்! பொலிஸ் மறிக்கிறது. கன்னத்தில் பலமாக அறைந்தான் ஒரு பொலிஸ். எனது தலைக்குள் வெள்ளிகள் தோன்றி மறைந்தன. நான் மண்ணுக்கு திரும்பி வந்தபோது நண்பனை சைக்கிள் ரியுப் இனுள்ளிருந்து காற்றை திறந்துவிட பணித்திருந்தான் மற்ற பொலிஸ்.
அன்று தொடங்கிய பொலிஸ் மீதான வெறுப்பானது இயக்க போராளிகளை தேடுதல் வேட்டை, கைது சித்திரவதை, விசாரணை, உளவுபார்த்தல் என பொலிஸ் களமிறங்கியபோது பன்மடங்கு கடுப்பாக்கிவிட்டிருந்தது. தவறுசெய்யாமலே பயப்பட வேண்டி வைத்த காக்கிச் சட்டை அரச வன்முறை இயந்திரத்தின் குறியீடாய், தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்றாய், வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறிவிட்டிருந்தது. இப்போதும் சினிமாவில் காக்கிச் சட்டையைக் கண்டால் எனக்குள்ளிருந்து ‘ஒருவன்’ சிலிர்த்தெழுந்துவிடுவான்.
காந்தி
Posted October 2, 2019
on:பெரியார் போலவே காந்தியும் மேலோட்டமாகவே எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அம்பேத்கார், பெரியார் போலவே காந்தியும் எனக்குப் பிடித்த தலைவர்களில் ஒருவர். வாழ்வு என்பது செயல்களால் மட்டுமல்ல செயல் மறுப்புகளாலும் அமைவது என நிகழ்த்திக் காட்டியவர் காந்தி என்பதால் போராட்டக் குணம்கொண்டவர்கள் காந்தியை வெற்றுச்சொற்களால் கடந்து செல்ல முடியாது. வலிமையான மைய அரசைவிட தன்னிறைவான கிராமங்களை உருவாக்குவது பற்றி பேசிய காந்தி எனக்கு முக்கியமானவர்.திணிக்கப்பட்ட ஒழுங்குகள் அச்சம் உள்ளவரைதான் நிலைக்கும் என்ற காந்தி முக்கியமானவர். நாம் கீழானவர்களாக உணராதபோது ஆள்பவர்கள் நமக்கு மேலானவர்களாக தம்மை உணர முடியாது என்ற நுண்ணரசியலை வெளிப்படுத்திய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். தமக்குள் விடுதலை அறத்தை கொண்டிராத தனிமனிதர்களும் சமூகமும் அரசியல் விடுதலையின் வழியாக எதனையும் பெற்றுவிட முடியாது என்பதை வௌ;வேறு வடிவங்களில் விளக்கிக் காட்டிய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். காந்தியத்தை கோட்பாட்டுப் புரிதலுக்கு உட்படுத்தி அதை ஏற்கவும், எதிர்க்கவும், கட்டவிழ்க்கவும் முடியாத அறிவுச் சோம்பேறித்தனத்திற்கு ஒப்பீட்டுப் பதிவுகள் ஒரு கேடு. பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம்” நூலை இவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
இனி.. ?
Posted September 14, 2019
on:VDO
https://www.srf.ch/play/tv/popupvideoplayer?id=e3911c84-38a2-42e7-b456-d9c31f4de65d
இந்த கடவுளின் தூதனுக்கு (Pastor) வயது 62. தமிழன். பெயர் வில்லியம்ஸ். தமிழுலகை உய்விக்க அவன் GGMCI என்ற Tamil Evangelical Church இனை Bern (swiss) இல் ஆரம்பித்து தனது சேவையைத் தொடங்குகிறான். அடங்காத சேவை மனசு அவனுக்கு. தனது கிளைகளை யேர்மனி, பிரான்ஸ், கொலன்ட், நோர்வே போன்ற நாடுகளிலும் படரவிட்டு அருளொளிச் சோதியை பாவப்பட்ட அகதித் தமிழருக்காக பரவவிடுகிறான். இந்த ஐந்து நாடுகளிலும் 25 தேவாலயங்களை ஆண்டவன் அவனிடம் ஒப்படைக்கிறான். இளம் பெண்கள் உட்பட பல தமிழ் மாந்தர்கள் தேவதூதனிடம் தம்மை ஒப்புக் கொடுக்க திரள்கின்றனர்.
என்ன செய்வது !
Posted September 12, 2019
on:அண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும்!. எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.
இப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.
சும்மா
Posted August 29, 2019
on:நான் படித்த பாடசாலைக்கு சுமார் 100 மீற்றருக்குள் கடலில் அலைகள் ஓயாது நீந்திக்கொண்டிருக்கும். அவை நீர்த்திவலைகளை பாறைகளின் மேல் அள்ளி வீசியபடி இருக்க, நீர்மேவி வரும் காற்று சிலிர்த்தெழுந்து அலையின் ஓசையை எனது பாடசாலைவரை காவிவரும். எமது இரசனைக்காக ஏங்குவதுபோல் அலைகள் மூச்செறிந்து அழைக்கும் ஓசைக்கு எதிர்த்திசையில் நடந்து பக்கத்து கோவிலின் தேர்முட்டிப் படியில் எமது மதிய உணவை உட்கொள்வோம். மூடி தனியே அகலா அந்த சதுர பிளாஸ்ரிக் பெட்டியை அரசமர சலசலப்புக்குக் கீழே வாசனையை முகரத் துடிக்கும் காற்றினை விலத்தி, திறந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.