அஞ்சலி !

“o jogo bonito” -PELE

20ம் நூற்றாண்டின் ஒரு மாபெரும் கால்பந்து வீரன் பெலே தனது 82 வயதில் 29.12.2022 காலமாகியிருக்கிறார்.

தனது 21 வருட கால்பந்து வாழ்வில் 1367 உத்தியோகபூர்வ போட்டிகளில் மொத்தம் 1283 தடவை இலக்குகளை (goals) வென்றவன் அவன். இதில் பிரேசில் தேசிய அணிக்கு அவன் பெற்றுக் கொடுத்த 77 இலக்குகள் அடக்கம்.

Continue reading “அஞ்சலி !”

தோட்டமும் காடும்

” ஐரோப்பா ஒரு தோட்டம். மற்றவையெல்லாம் காடுகள்”

ஐரோப்பிய ஆணையத்தின் உபதலைவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான கொள்கை வகுப்பாளர்களின் உயர் அதிகாரியுமான யோசப் போர்ரல் அவர்கள் இவ்வாறு செப்பியிருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.

“ஐரோப்பா என்ற தோட்டத்தை நாம் நிர்மாணித்திருக்கிறோம். எல்லாமே சரியாக தொழிற்பாட்டில் உள்ளது. அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் செழிப்பு, சமூக ஒருமைப்பாடு என்ற மூன்றும் இணைந்ததாக அது செயற்படுகிறது. இவ்வாறான அற்புதமான செழிப்பான சுதந்திரமான ஐரோப்பா இந்த உலகில் விதிவிலக்கானது.

Continue reading “தோட்டமும் காடும்”

மைக்கேல்

Thx: Betty Images

அவள் பெயர் மரியா. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து உதித்த கொராற்சியா நாட்டை சேர்ந்தவள். அவளுக்கு அப்போ 20 வயதாகியிருக்கவில்லை. 200 பேர் வேலைசெய்யும் எமது தொழிற்சாலையின் உற்பத்திப் பகுதியில் அவள் உட்பட ஓரிரு பெண்கள் மட்டுமே வேலைசெய்தனர்.

மரியா வேலைக்கு வந்தபோது விடலைப் பருவம் முற்றாக நீங்கியிருக்கவில்லை. அவள் பெடியனா பெட்டையா என பலருக்கும் குழப்பம் இருந்தது. எனக்கும்தான். அவளது உடை, நடை, தலைமயிரின் நவீன அலங்காரம் எல்லாமும் இந்த குழப்பத்தை தந்தன. அவளுக்கு மார்பகங்கள் பெண்பாத்திரம் கொள்ளவில்லை. முகம் குழந்தைபோல் இருந்தது. இணைநண்பன் (boy fiend) இல்லை.

Continue reading “மைக்கேல்”

சைக்கிள் கலாச்சாரம்

நெதர்லாந்து சைக்கிள் கலாச்சாரம் கொண்ட நாடு. 17 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அந்த நாட்டில் 22 மில்லியன் சைக்கிள் பாவனையில் உள்ளன. பயன்பாட்டு அடிப்படையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சைக்கிள்களை வைத்திருக்கிறார். குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை, தொழிலாளி தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரை சைக்கிளில் பயணிப்பதை நெதர்லாந்தில் காணலாம். நெதர்லாந்து சென்றபோது அந்தக் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். அது ஒரு கலாச்சாரமாக சுழல்கிறது.

Continue reading “சைக்கிள் கலாச்சாரம்”

சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் கல்பிட்டி பிரதேச எல்லைக்குள் ஒருபுறம் பாக்குநீரிணையையும் மறுபுறம் “டச் வளைகுடா”வையும் கொண்டுள்ள 14 சிறிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. அதில் 25 ஹெக்ரர் பரப்பளவைக் கொண்ட இரண்டாவது பெரிய தீவு உச்சிமுனை என்று அழைக்கப்படுகிறது. இதை சுவிஸ் இனை தளமாகக் கொண்ட சுற்றுலா கம்பனியொன்று (Let’s Travel) 30 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. மாலைதீவின் மாதிரி வடிவில் 150 நீர்சூழ் பங்களாக்கள் முளைக்கும் சுற்றுலா விடுதி தோன்ற இருக்கிறது. “சுற்றுச்சூழலை காதலிக்கும் விடுதி” என்ற பெயர்ப்பலகையோடு இத் திட்டம் உருவாகிறது.

Continue reading “சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !”

மாயை ஆகுமா ?

image: slguardian.org

காலிமுகத்திடல் போராட்டத்தில் ராஜபக்சக்களை அகலுமாறு கேட்டு போராடியது எவரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்காதளவு வெற்றியளித்திருக்கிறது. ஒரு அரண்மனை ஆட்சி வீழ்ந்துகொண்டிருப்பது போல அதை விழிபிதுங்க பார்த்தார்கள் மக்கள். போரை வெற்றிகொண்ட ஒரு மன்னராக கொண்டாடப்பட்ட மகிந்தவின் வரலாறு மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றளவுக்கு சென்றிருந்தது. இன்று அந்த மன்னன் குறித்த பிம்பத்தை இந்தப் போராட்டம் தகர்த்ததோடு அவரை ஓடிஒளிந்துகொள்ளவும் வைத்திருக்கிறது. இது மிகப் பெரும் சாதனை. மக்கள் போராட்டத்தின் வலுவை உணர்த்திய சம்பவம்.

Continue reading “மாயை ஆகுமா ?”

காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?

இலங்கையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் தீவிரவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும்தான் இருக்கிறார்கள் என மகிந்த கூறியிருக்கிறார். சிங்கள மக்கள் முன்னிலைப் பாத்திரம் அளித்து தொடங்கிய இந்த எழுச்சியை அவர் இலாவகமாகவே இனவாத அரசியலாக திசைதிருப்புகிறார்.

Continue reading “காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?”

போருற்ற உலகு !

saurce : Reuters, Nato

யுத்தம் வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.

Continue reading “போருற்ற உலகு !”

ஒருவேளை..?

நாம் வாழுகிற கிராமம் சுமார் 7000 பேரை சனத்தொகையாகக் கொண்டது. இப்போது இருக்கும் வாடகை வீட்டில் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது. வேறு இடம் மாற எந்த விருப்பும் வந்ததில்லை. வீட்டின் யன்னலுக்கூடாக தெரியும் அல்ப்ஸ் (Alps) மலைத்தொடரும் முன்-அல்ப்ஸ் (front Alps) மலைகளும் வேலையின் எல்லா களைப்புகளையும் வாரியள்ளி எடுத்துச் சென்றுவிடும். வீட்டின் செற்றியில் இருந்தபடியே அதை பார்த்துக்கொண்டிருப்பேன்.

Continue reading “ஒருவேளை..?”

முஸ்கான் அலை

ஒவ்வொரு சம்பவங்களும் புதிதாக உருவாகிறது என்பதை விடவும், சமூகவலைத்தளங்களினாலும் இன்றைய தொழில்நுட்ப வசதியினாலும் அவை உடனுக்குடன் வெளிக்கொணரப்படுகிறது என்பதே பொருத்தமானது. எதிர்ப்புக்குரலுக்கு தளமாகவும் அநியாயங்களை காட்சி ரூபத்தில் அம்பலப்படுத்துவதாகவும் இன்றைய சமூக ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன என்ற அம்சங்கள் முக்கியமானது.

Continue reading “முஸ்கான் அலை”