பெண்கள்மீதான உளவியல் தாக்கம்

– வானொலி விவாதத்தின்போது…-

பெண்கள்மீது உளவியல் ரீதியில் தாக்கம் கொள்பவற்றில் முக்கியமானது கருத்தியல். ஆண் அதிகார கருத்தியல்கள்தான் அவை. பெண்சம்பந்தமான -அதாவது பெண்மை பற்றிய- வரையறைகள் இந்த ஆண்நோக்கின் அடிப்படையில்தான் வரைவு செய்யப்பட்டன.

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள்@ ஆண் அவர்களை பாதுகாப்பவன் என்ற மனோநிலைகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் பெண் இரண்டாம்தர -அதாவது தங்கிவாழும் மனோநிலைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இது ஒரு முக்கியமான உளவியல் தாக்கம்.

Continue reading “பெண்கள்மீதான உளவியல் தாக்கம்”

நடுஇரவு விவாதம் ஆணாதிக்கப் பிசாசின் நடமாட்டம்

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பொழுதுபோக்கின் பெரும்பகுதியை ஆரம்பத்தில் தமிழ்ச் சினிமா விழுங்கியிருந்தது. இப்போதெல்லாம் புலம்பெயர் வானொலிகள் (தொலைக்காட்சி?) இதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. வலிமையான வெகுஜன தொடர்புச் சாதனங்கள் என்ற வகையில் எமது தமிழ்ச் சமூகத்தின்மீது இவை ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமானது.

Continue reading “நடுஇரவு விவாதம் ஆணாதிக்கப் பிசாசின் நடமாட்டம்”

தொற்றவைப்பது எதை?

எப்பிடி சுவிஸ் சனம். உங்களோடை எப்படி?

என்ன… எங்களை ஸ்வாற்ஸ் (கறுப்பர்) என்று சொல்லுவாங்கள். சிலவேளைகளில் இதைச் சொல்லி திட்டுவாங்கள்.
அவங்களுக்குச் சொல்லு, ஊரிலை நாங்கள்தான் வெள்ளையெண்டு.

சிரிப்பதற்கு மட்டுமல்ல ஒரு பொறியாய் அது மனசில் விழுந்தது.

Continue reading “தொற்றவைப்பது எதை?”

றாகிங் – ஒரு வன்முறை

ragging-1

“நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்”

சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ்.

Continue reading “றாகிங் – ஒரு வன்முறை”