பேய்த்தோப்புக்குள் விளக்கு !

1984 கடைசிப் பகுதி.

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரந்தராயன்குடிக்காடு கிராமம்.

கழக கமாண்டோப் பிரிவினருக்கான தொலைத்தொடர்பு முகாம்.

“பெரிய ஐயா” வருகிறார், உளவுப்படை தளபதி சங்கிலியின் பாதுகாப்புடன்.

 பெரிய ஐயா வெள்ளை வேட்டியுடன் சிவப்புநிற ரீசேர்ட் உடன் இப்போதெல்லாம் பஸ்ஸில் வந்து இறங்குவதில்லை. அவருடன் சந்ததியாரையும் காண்பதில்லை.

மோட்டார் சைக்கிள் சவாரி. கமாண்டோ யூனிபோர்ம். முன்னுக்கும் பின்னுக்கும் இன்னும் ஒருசில மோட்டார் சைக்கிள் உறுமல். ஜீப் வேறை.

Continue reading “பேய்த்தோப்புக்குள் விளக்கு !”

ஏன் இந்தவகை ஒப்பீடுகள்?

//காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.// – பாலன் தோழர்

  சீமான் சொல்வது பச்சைப் பொய் என்ற ஒரு பதில் போதாதா ?

 பாலுமகேந்திரா ஒரு படைப்பாக்கத் திறனுள்ள கலைஞன். ஈழத்தில் பிறந்தார்தான். அதையும் தாண்டிய பெருவெளியில் அவரது படைப்புகள் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது. அவரும் அப்படியேதான் தனது படைப்புலகத்தில் இயங்கினார்.  அவர் பேசப்படும் கலைஞனாக பரிணமித்ததிற்கு அதுவும் ஒரு காரணம்.

Continue reading “ஏன் இந்தவகை ஒப்பீடுகள்?”

வாழைமரக் கதை

“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன? ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.

Continue reading “வாழைமரக் கதை”

போர்க்குற்றக் குரல்

பொதுநலவாய நாடுகளில் பங்காளிகளாக உள்ள நாடுகளில் கணிசமானவை இரத்தக்கறை படிந்த(யும்) நாடுகள்தான். ராஜபக்ச அன்ட் கோ அரசின் போர்க்குற்றங்கள் இம் மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்படுவது என்பது அதை எதிர்த்தல் என்று அர்த்தப்படாது. உண்மையில் அதன் கடினத்தன்மையை மென்மையாக மாற்றுதற்கே பயன்படும். Hard Image இனை Soft Image ஆக மாற்றும் ஒரு சம்பிரதாய அரங்கு. இலங்கை அரசு இதை நன்கு அறிந்தே வைத்துள்தால் அதை  கோலாகலமாக நடத்த ஓடித்திரிகிறது.

Continue reading “போர்க்குற்றக் குரல்”

சவாரி

எழுபதுகளின் இறுதிப் பகுதி. ரியூசன் கலாச்சாரம். சைக்கிள் மிதி. பருத்தித்துறையின் தம்பசிட்டி வீதியில் மாலை 5 மணியை முந்தியபடி நாம் (நேர விடயத்தில்) வெள்ளைக்காரர்களாய் இருப்போம். 5 மணியைத் தாண்டியால் நாம் வகுப்புக்குள் நுழைய முடியாது. கணித பாடத்தை „சாக்கர்“ நடத்த, சரியாக 5 மணிக்கு 5 நிமிடம் இருக்க -கால்நடையாக- கேற்றை வந்தடைவார். ஒருநாளுமே இந்த நியதி பிழைத்ததாக எனக்குத் தெரியாது.

Continue reading “சவாரி”

சீற்றம்

சிவகாமி அவர்களின் உரையாடல் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. தேவையானதும்கூட. அதே நேரம் அவரின் அந்த உரையாடல் காணொளிக்கு வந்திருக்கும் சில பின்னூட்டங்கள் பல அருவருப்பூட்டுபவையாக உள்ளன என்பதை கண்டுகொள்ளாமல் விடமுடியாது. அந்தவகைப் பின்னூட்டங்கள், நிலைத் தகவல்கள் தமிழ்த் தேசிய வெறியர்களினதும் ஒழுக்கவாதிகளினதும் “மனவளத்தை” வெளிப்படுத்துகின்றன.

Continue reading “சீற்றம்”

சித்திரம் பேசுதடி..!

இலங்கை அரசியல் மனநிலையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தமிழின உணர்வாளர்கள் மட்டுமல்ல, தமிழக புத்திஜீவிகளும் எந்தளவு புரிந்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வரும் கேள்வியாக உள்ளது. புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரதேசங்களில் நிழல் ஆட்சி புரிந்தபோது, ஆகா ஓகோ என உணர்வாளர்கள் (திரைப்பட இயக்குநர்கள், ஓவியர்கள், புத்திசீவிகள் என) தமிழகத்திலிருந்து படையெடுத்தவர்கள் அந்த நிழல் ஆட்சி பற்றி சித்திரம் வரைந்து பெருமிதப்பட்டனர். மக்கள் தரப்பிலிருந்து எதையும் கண்டுகொள்ளத் தவறினர்.

Continue reading “சித்திரம் பேசுதடி..!”

நிழல் Hero ?!

மை கார்.. மை றோட்.. மை பெற்றோல் !

மை கார்.. மை றோட்.. மை பெற்றோல். இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர் எனது ஊர் இங்கிலீஷ் தங்கராசா. அவர் கள்ளுக் கோப்பரேசனுக்குப் போகும்போது தமிழில் பேசுவார். திரும்பிவரும்போது அதிகம் இங்கிலீஷ் பேசுவார். அவரே தனது இங்கிலீசை அப்பப்போ தமிழாக்கமும் செய்வார். எனக்கும் நண்பர்களுக்கும் அவரை நன்றாகப் பிடிக்கும். தண்ணியடிச்சால் பறக்கும் தூசணவார்த்தைகளை வெறிக்குட்டிகளிடமிருந்து கேட்டுப் பழகிய எமக்கு, தங்கராசா அந்த றூட்டிலை வராத ஒருவர் என்றளவில் மனம்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையாளனாகத் தெரிந்தார். 

Continue reading “மை கார்.. மை றோட்.. மை பெற்றோல் !”

பொழுதைத் தோய்த்தல்

நான் அநேகமாக நித்திரையாகிக் கொண்டிருந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்த சிறுகதைத் தொகுப்பின் நான்காவது கதையை நான் வாசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கையிலிருந்து புத்தகம் நழுவி தலையணையில் மெல்ல சாய்ந்துகொண்டது. அதன் போதையை நான் சுகித்திருக்க வேண்டும். கையில் புத்தகங்களை எடுத்தாலே இடையில் ஓர்; பக்கம் திறந்திருக்க நான் தூங்கிப் போய்விடுவதுண்டு. எழுத்து என்னில் ஊறுவதும் எழுத்தாளனிடமிருந்து நான் விடைபெற்று அதை நகர்த்தபவனுமாய்ப் போவேன். பின்னர் தூங்கிப் போய்விடுவேன்.

Continue reading “பொழுதைத் தோய்த்தல்”