அஞ்சலி !

“o jogo bonito” -PELE

20ம் நூற்றாண்டின் ஒரு மாபெரும் கால்பந்து வீரன் பெலே தனது 82 வயதில் 29.12.2022 காலமாகியிருக்கிறார்.

தனது 21 வருட கால்பந்து வாழ்வில் 1367 உத்தியோகபூர்வ போட்டிகளில் மொத்தம் 1283 தடவை இலக்குகளை (goals) வென்றவன் அவன். இதில் பிரேசில் தேசிய அணிக்கு அவன் பெற்றுக் கொடுத்த 77 இலக்குகள் அடக்கம்.

3 உலகக் கோப்பைகளை வென்ற அந்த விளையாட்டு வீரன் 1977 இல் தனது 34 வயதில் கால்பந்து விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றான். அன்று கடைசியாக மைதானத்தில் தனது தந்தை ஒருபுறமும் மொகமட் அலி மறுபுறமுமாக நிற்க கையில் ஒலிவாங்கியை பிடித்தபடி, மைதானத்திலிருந்த 75000 க்கு மேற்பட்ட கால்பந்து இரசிகர்களைப் பார்த்து சொல்கிறான் “என்னுடன் சேர்ந்து இந்த முன்று வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லுங்கள் „ “for the children: LOVE LOVE LOVE”. அந்த வார்த்தை பேரொலியாய்க் கிளம்புகிறது. அந்தளவுக்கு குழந்தைகளை நேசித்தான்.

1969 றியோ வில் தனது 1000 வது (goal) இலக்கினை அடித்தபோது அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்னார், “இந்த 1000 வது goal இனை பிரேசில் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்” என!. பிரேசில் குழந்தைகளின் கடினவாழ்வு பற்றியும் அவர்கள் கல்வி ஊட்டப்படாத நிலையில் இருப்பது பற்றியும் கண்ணீர் விட்டபடி அவர் பேசினார்.

2007 இல் நியூயோர்க்கில் ஒரு நிகழ்வின்போது, இன்று பிரேசிலில் வன்முறை மற்றும் corruption இரண்டுமே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றார். கடந்த இரண்டு சந்ததி காலமாக பிரேசில் பிள்ளைகள் போதிய கல்வி வசதி இல்லாமல் இருக்கிறார்கள் என விமர்சித்தார்.

1995 இல் அவர் பிரேசில் ஜனாதிபதி பெர்னான்டோ ஹென்றிக் இனால் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். வியாபாரத்தை மையமாகக் கொண்டு இயங்கிய கால்பந்து கழகங்களை கட்டுப்படுத்தும் சீர்திருத்தங்களை செய்ய முயன்றார்.

1981 இல் Victory உட்பட சில திரைப் படங்களில் நடித்தார். இப் படத்தில் மிக்கேல் கைன் மற்றும் சில்வஸ்ரர் ஸ்ரலோன் ஆகியோரும் நடித்திருந்தனர். அத்தோடு இசைத்துறையிலும் நாட்டமுடையவராக இருந்தார். அவர் தன்னளவில் மெட்டமமைத்த பாடல்களை பிரேசில் பொப் பாடகர்கள் அவரது அனுமதியின்றியே பிரதி பண்ணினர். அதை சட்டை செய்யாத அவர் அதற்கு அளித்த பதில் “Music is Fun”.

பிலே கால்பந்து விளையாட்டில் தனது நுண்திறமையை கடவுள் பரிசளித்ததாக நம்புகிறார். இன்று விளையாட்டு நுட்பங்களும் வேகமும் இன்னும் பல மடங்கு முன்னேறியிருக்கிறது என்றபோதும் அதன் ஊற்றாய் அன்றைய காலவெளியில் அசாதாரணமான விளையாட்டு நுட்பங்களைப் புகுத்தி பெலே உலகை ஆகர்சித்திருந்தான். இவ்வாறாகத்தான் கால்பந்தின் ஒரு குறியீடாக அவன் வரலாற்றில் மாறியிருக்கிறான்.

“o jogo bonito” — the beautiful game என கால்பந்தை அவன் நேசித்தான்.

அந்த விளையாட்டு வீரனின் மறைவுக்கு எனது அஞ்சலி !

(Thx for images : The nationalnews, The telegraph)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: