நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவு இலங்கை. நாம் ரின் மீனை இறக்குமதி செய்கிறோம். நிலமும் நீர்வளமும் வெயிலும் மழையும் உள்ள இந்த நிலத்தில் காய்கறிகளுக்காக அழுகிறோம். வீட்டுத் தோட்டங்களும் பற்றை வளர்ந்து கிடக்க மோட்டார் சைக்கிளில் ஊர்சுற்றுகிறோம். சில நூறு மீற்றர் தொலைவிலுள்ள கடையில் ஒரு கிலோ வெங்காயம் வாங்க மோட்டார் சைக்கிளை கலைக்கிறோம். யாழ்ப்பாண வாழ்நிலை இது. புகலிடம் வடபகுதிக்குள் காவி வந்த பவுசு, சொகுசு கலாச்சாரம் இதில் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறது.
*
கோத்தபாய ஒரு நாட்டை வழிநடத்தும் திறமையற்ற, சாகசத்தை அரசியலாக காட்ட முனைந்து தோற்றுக்கொண்டிருக்கும் தலைவர். நாடு கடனில் மூழ்குகிறது. அவர் திகிலடைந்துபோய் இருக்கிறார்.
*
போர் ‘வெற்றி’ சாப்பாடு போடாது மாறாக சாப்பாட்டு தட்டுகளை தட்டிப் பறிக்கும் என சிங்கள மக்கள் உணரும் காலம் இது.
*
காய்கறிகள் தட்டுப்பாட்டுக்கு அரசு மட்டும்தான் காரணமா. எத்தனையோ வீட்டுத் தோட்டங்கள் பற்றைகளாக வளர்ந்திருக்கின்றன. பற்றைகளை நாட்கூலி வைத்து வெட்டித் துப்பரவாக்கிய அனுபவம் எனக்கும் இருக்கிறது. ஐரோப்பிய குடும்பங்கள் சிறு நிலத்துண்டை தோட்டமாக வாடகைக்குத் தன்னும் எடுத்து காய்கறியை நடுகிறார்கள். (சில தமிழர்கள் கூடத்தான்). நாலு தக்காளி, நாலு போஞ்சி, கத்தரி, சலாட், பீற்றூட் ,வெங்காயம், மிளகாய் என அதுவும் ஒரு நான்கைந்து மாத வெயில் காலத்துள் அதன் பயனை எடுத்துவிடுகிறார்கள். அதைப் பார்த்து வருடம் முழுவதும் குளிரேயற்ற ஒரு பிரதேசத்தில் இருந்துகொண்டு நாமெல்லாம் என்ன செய்கிறோம் என குற்றவுணர்வு அடைந்திருக்கிறேன்.
*
பூச்செடி அழகானதுதான். அதேயளவுக்கு சில காய்கறி மரங்களையும் – வேண்டுமானால் அழகாகவும்- வளர்க்க முடியும். பாவற்கொடியால் -வாசல் வளைப்பாக- பந்தல் போட்டிருந்த ஒருசிலரைக் கண்டு வியந்திருக்கிறேன்.
*
நாட்டில் இளைய பட்டாளம் நாற்பது வீதத்தினர் நாட்டைவிட்டு வெளியேற விரும்புவதாக ஒரு செய்தி வருகிறது. வந்தவர்களை வெளிநாட்டில் கோப்பை கழுவுகிறார்கள், ரொயிலற் கழுவுகிறார்கள் (அல்லது வெள்ளைக்காரனின் குண்டியைக் கழுவுகிறார்கள்) என நையாண்டி செய்கிறார்கள். தொழிற் பிரிவினையை சாதிய மனநிலையில் பார்ப்பது என்பது வேறு கூலியுழைப்பின் வருமான போதாமையாகப் பார்ப்பது வேறு. முதலாவது மனநிலை தாய் மண்ணில், இரண்டாவது மனநிலை புகலிட நாட்டவரின் மண்ணில்.
*
70 களில் சிறிமா கால பஞ்சம் துயரமான நினைவுகளை மட்டுமல்ல, படித்தவர் என வீம்புடன் திரிந்தவரையும், எல்லோரையும் உணவு உற்பத்தியில் இறக்கிய ஒரு சாகசக் காலத்தையும் நினைவுக்கு கொண்டுவருகிறது.
- 08012022
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/6921373421267026
சில நூறு மீற்றர் தொலைவிலுள்ள கடையில் ஒரு கிலோ வெங்காயம் வாங்க மோட்டார் சைக்கிளை கலைக்கிறோம். யாழ்ப்பாண வாழ்நிலை இது. புகலிடம் வடபகுதிக்குள் காவி வந்த பவுசு, சொகுசு கலாச்சாரம் இதில் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறது.
தொழிற் பிரிவினையை சாதிய மனநிலையில் பார்ப்பது என்பது வேறு கூலியுழைப்பின் வருமான போதாமையாகப் பார்ப்பது வேறு. முதலாவது மனநிலை தாய் மண்ணில், இரண்டாவது மனநிலை புகலிட நாட்டவரின் மண்ணில்.