ஒருமுறை வேலைநிமிர்த்தம் இங்கு (சுவிஸ்) வந்த பெங்களூர் நண்பர் ஒருவர் தமிழீழத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்துவிட்டிருந்தால் இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா..“ என அங்கலாய்த்தார். அவரிடம் நான் சொன்ன பதில், “அப்பிடியொரு நிலை வந்தால் இந்திய மாநிலமாக இருப்பதைவிட நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்காக போராட வேண்டி ஏற்படும்.“ என.
அவ்வப்போது (ஆற்றாமையில்) எழும் குரலொன்றுக்கு கோட்பாட்டு விளக்கம் விடையளிக்குமென நான் நினைக்கவில்லை. மனிதரின் உள்ளக மனம்கூட தனது உடலுக்குள் கட்டுப்பட்டு இருப்பதில்லை. அது மற்றைய உடல்களுக்குள்ளும் உலாவக்கூடியது. அதனால்தான் மனிதநேயம், மனதாபிமானம், உணர்வு.. என்பனபற்றியெல்லாம் பேச முடிகிறது. பிரச்சினை அதுவல்ல.
இலங்கைத் தமிழ் மக்கள் என்ன அரசியல் மனநிலையில் இருக்கிறார்கள்இ விடுதலைப் போராட்டமும்இ போர்களும் அவர்களை அழைத்துவந்திருக்கும் இடம்இ வாழ்நிலை மாற்றங்கள் என்பன போன்ற எந்த புரிதலுமின்றிஇ தமிழீழம்தான் தீர்வு என ஈழமக்கள் விடாப்பிடியாக நிற்பதுபோல செய்யப்படும் பிரச்சாரம் குமட்டுகிறது. தமிழனுக்கான நாடு ஒன்று இல்லையே என்ற பச்சாதாபம்தான் இதில் இருக்கிறது. அவர்களின் இந்தக் கனவை நொந்துபொயிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் தலையில் கட்டுவதை என்பவென்பது. புலிகளை உயிர்ப்பித்துக் காட்டிக்கொண்டிருக்கும் இவர்களின் “கொந்தளிப்பான” பேச்சுகள் ஈழத்தில் தமிழ் மக்களை குறிப்பாக முன்னாள் போராளிகளை எவ்வளவு நெருக்கடிக்குள் தள்ளக்கூடியது என்ற எந்தவித எச்சரிக்கையுணர்வும் இல்லாதது.
ஒரு விடுதலைப் போராட்டத்தின் தோல்வியை அதில் சம்பந்தப்பட்ட அரசியல் சக்தி என்றளவில் விமர்சன ரீதியில் பார்ப்பதை விடுத்துஇ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களாக ஒளிவட்டம் சூட்டுவதுஇ தலைவர் உயிரோடு இருக்கிறார்.. திடீரென தோன்றி தமிழீழத்தைப் பறித்தெடுப்பார் என மேடைகளில் அரற்றுவது, ஈழக் குழந்தைகள் பிறக்கும்போதே அச்சம் என்றால் என்னவென்று தெரியாமல் பிறக்கிறார்கள் என லூசுத்தனமாக மேடையில் கத்துவது, இவைகளை வைத்து தமிழக மக்களிடம் தேசியவெறியை ஊட்டுவது, தமிழகம் வரும் சிங்கள மக்களை அல்லது பிக்குமாரை அடிப்பது துன்புறுத்துவது ஈழப்பிரச்சினையை முன்வைத்து எடுக்கப்படும் தமிழகப் படங்கள் தரும் ஏமாற்றங்கள்… என்றவாறெல்லாம் ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. (இது தமிழக மக்களை கட்சிகளாலும் மேடைப் பேச்சாலும் கட்டிப்போடுகிறவர்களின் தகிடுதத்தங்களேயொழிய தமிழக மக்களினது குரலாக பார்க்க முடியாது.)
ஈழப்பிரச்சினையை வைத்து பிழைப்பு நடத்தும் நிலை அரசியல் தளத்தில் மட்டுமல்ல (சினிமா குறும்படம் விவரணப்படம் என) கலைத் தளத்திலும் நாம் பார்க்கிற மோசடிகள். அரசியல் தளத்தில் சமூகப் பிரக்ஞை சார்ந்த புத்திசீவிகள்இ ஆய்வாளர்கள்இ ஆர்வலர்கள் போன்றத தமிழக அரசியலாளர்களின் மாற்றுக்குரல்கள் தமிழகக் கட்சிகளின் கூச்சல்களுக்கிடையே உரத்துக் கேட்கும் வாய்ப்புகளும் அரிதாகவே இருக்கின்றன. (போராட்ட களத்திலிருந்த புலிகள் உட்பட்ட ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் அந்தக் கூச்சல்தான் முக்கியமானதாக இருந்தது என்பது இன்னொரு சுவாரசியம்.)
01072019
FB link :