சுடுமணல்

‘ஆதரவு’ சந்திப்பு – 2019

Posted on: June 26, 2019

சுவிஸ் ஆதரவு அமைப்பு தனது 5வது வருடத்தை கடந்திருக்கிறது. ஆரம்பத்தில் நான்கு பேர் கொண்ட குழுவாக -தமது திருப்திக்காக- வன்னியில் போர்ப்பட்டு அங்கங்களை இழந்த மக்களில் சிலருக்காவது தாம் உதவவேண்டும் என்ற மனச்சாட்சியின் வழிநடத்தலினால் உந்தப்பட்ட நண்பர்கள் அனைவருமே சூரிச் இல் ரக்சி சாரதிகளாக இருந்தனர். (பனிக்காலப் பொழிவின் வெப்பநிலை சைபர் பாகைக்கு கீழே போயிருக்க சூரிச் ஏரியிலிருந்து புறப்பட்டு வருகிற காற்று குளிரை இன்னமும் அதிகமாக்கிக் கொண்டிருக்கும். இரவுப் பொழுதில் ரக்சி தொழிலாளியாக வேலைசெய்வது அவளவு இலகுவானதல்ல).

இலங்கையில் போர்ப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் தம்மளவில் சிறு துரும்பையாவது நகர்த்துவதற்கு (2014 இல்) அவர்கள் சேர்ந்து எடுத்த முடிவு “ஆதரவு (ளரிpழசவ)” என்ற அமைப்பின் தோற்றுவாயாக இருந்தது. இவ் அமைப்பு இன்று சுமார் இருபது பேரின் நிதிப் பங்களிப்புடனும் கணிசமானவர்களின் மனிதநேய ஆதரவுடனும் இயங்கும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிசுக்கு வெளியேயும் – கனடாஇ லண்டன்இ யேர்மன்இ அவுஸ்திரேலியா- தமிழ் நண்பர்கள் சிலர் தமது பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறார்கள். சேர்பிய நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவரும் தனது நிதியாதரவை செய்கிறார்.

இது ஒரு நட்பு வட்டமாக படிப்படியாக மையத்திலிருந்து விரிவடைந்து செல்லும் அமைப்பு. வீக்கமுமில்லை. விளம்பரமுமில்லை. உண்டியல் குலுக்கலுமில்லை. எந்த வழியிலாவது நிதி சேர்ப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டதுமில்லை.

போர்ப்பட்ட சமூகத்தின் தேவைகள் குவிந்துபோய் இருக்கின்றன. பல்வேறுபட்ட சுயமான அமைப்புகளின் தோற்றமும் வெவ்வேறு வகைப்பட்ட தேவைகளை இலக்காகக் கொண்டு இயங்குகிற அவற்றின் செயற்பாடுகளும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பங்கை வகிக்க வல்லவை. அவ்வாறான வேறு பல அமைப்புகளும் இயங்குகின்றன என்பது உண்மை. நிறுவனமயப்படாமல் அவர்கள் இயங்கினால் நல்ல விசயம். அந்த இயங்குமுறையில்தான் -பெருமளவு நிர்வாகச் செலவை விழுங்கி ஏப்பம் விடுகிற அமைப்பாக இயங்காமல்- பயனாளர்களை பெரும்பகுதி நிதி சென்றடையத்தக்கவாறு இயங்குதல் சாத்தியமாகும்.

ஆதரவு அமைப்பைப் பொறுத்தளவில் பயனாளர்கள் அவர்கள் தேர்ச்சிபெற்ற அல்லது தேர்வுசெய்த சுயதொழிலை உருவாக்கிக் கொடுப்பதும் படிப்படியாக அதன்வழி அவர்கள் முன்னேறி தமது வாழ்வாதாரத்தை அதற்குள்ளால் உருவாக்கிக்கொண்டு வாழ்வதுமே எமது வரையறைக்குள்ளான செயற்பாடு. அதாவது அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க கைகொடுத்து வழிகாட்டிவிடுவதுதான் எமது நோக்கம்.

வியாபாரம் (துணிஇ பலசரக்குஇ மீன்) உட்பட வெல்டிங்இ தையல்இ விவசாயம்இ கால்நடை வளர்ப்புஇ புகைப்படக் கலைஇ சலூன்இ கதிரை வாடகைக்கு கொடுத்தல்இ வாகனத்துக்கு வர்ணம் பூசுதல்இ மீன்பிடிஇ லாண்ட் மாஸ்ரர் (டுயனெ அயளவநச) மூலமான தொழில்இ சிப்ஸ் குடிசை ஆலை… என பல வகைப்பட்ட சுயதொழில்களுக்கு எமது ஆதரவு அமைப்பு உதவியிருக்கிறது.

மக்களை எப்போதுமே கையேந்துபவர்களாக வைத்துக்கொண்டு பல உதவிநிறுவனங்கள் (Nபுழு) தொழில் நிறுவனம்போல் செயற்படுகிற நிலை அந்த மக்களை ஏழ்மை நிலையிலேயே இருக்கக் கோருகிற ஒன்று. அதுவே அந்த உதவி நிறுவனங்களின் வாழ்வுக்கும் பிழைப்புக்கும் அவசியமானது. இதை மறுத்து மாற்று பாதையில் செயற்படுவதே எமது “ஆதரவு” அமைப்பின் வேலைமுறை. சேர்க்கப்படுகின்ற நிதியின் பெரும் பகுதியை நிர்வாகச் செலவுக்குள் முழுங்கிவிட்டு ஒரு சிறு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு -கமரா சாட்சியாக- வழங்குகிற உதவிநிறுவனங்களின் வேலைமுறையோடு ஒத்துவராத அமைப்பு ஆதரவு அமைப்பு.

பயனாளர்களுக்காக சேர்கிற நிதியிலிருந்து நிர்வாகச் செலவு எதுவுமே ஒதுக்கப்படுவதில்லை. நிர்வாகச் செலவை செயற்குழுவாக இருக்கும் மூவரும் தொடர்ச்சியாக தனிப்பட பொறுப்பேற்றுக் கொள்கிறோம். வரவுப் பணம் முழுவதுமே பயனாளர்களை சென்றடைகிறவாறாக அமைத்துக்கொண்டு செயற்படுகிறோம். வன்னியில் எம்முடன் இணைந்து வேலைசெய்யும் நண்பருக்கு சம்பளம் கிடையாது. அதேபோலவே மட்டக்களப்பிலும்!. அவர்களது சமூகநலனும் எமது சமூகநலனும் இணைந்துகொண்டதால் சிக்கல்கள் இல்லாமல் நகர்கிற நிலை எம்மை உற்சாகமாகவே வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல தமது வாகனங்கள் செல்லக்கூடிய எல்லைவரை செயற்படுகின்ற அமைப்புமல்ல ஆதரவு. வன்னியைப் பொறுத்தவரை எமது செயற்பாடுகளில் பெரும்பாலானவை ஆழ்வன்னியை கவனத்தில் எடுத்தவை. ஆட்டோ புக முடியாத இடங்களிற்கும் நாம் பயணிக்கிறோம். காட்டின் தொடக்கத்தில் காடுவெட்டி இருப்பிடம் அமைத்து வாழ்தலுக்காக போராடும் தொங்கல் மனிதர்கள் வரை கவனத்தில் எடுத்து -முடியுமானளவு- செயற்படுகிறோம். சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய வேலைமுறைகள் எமது நிகழ்ச்சிநிரலில் இல்லை.

ஒவ்வொரு வருடமும் அடையாளம் காணப்படுகிற பயனாளர்களை நாமும் அவர்களும் இணைந்து நேரடியாகவே களத்தில் சந்தித்து முடிவுகளை மேற்கொள்கிறோம். அடையாளம் காணப்படுகின்ற பயனாளரின் வங்கி இலக்கத்துக்கு பணம் போய்ச் சேரும். அவர்கள் தமது சுயதொழிலை தொடங்குவதற்கான வேறு உதவிகளும் தேவைப்படுமிடத்து அதை செய்கிறோம். அவர்கள் சுயதொழிலை ஆரம்பித்துஇ அதை இயங்குநிலைக்கு மாற்றிஇ வாழ்வாதாரத்தை அதற்குள்ளால் பெறும் ஆரம்பநிலைவரை அவர்களை அவதானிக்க வேண்டிய தேவையும் எமக்கு இருக்கிறது.

இவ்வாறாக இந்த 5 வருடத்தில் இதுவரை 52 பயனாளர்களுக்கான சுயதொழிலுக்கு நாம் உதவியிருக்கிறோம். இதில் ஒருசில பயனாளர்கள் தவிர மற்றைய எல்லாமும் பயனளித்திருக்கிறது. மட்டக்களப்பில் இதுவரை 10 பயனாளர்களும் வன்னியில் 42 பயனாளர்களும் எமது ஆதரவு நிதியைப் பெற்று பயனடைந்திருக்கின்றனர். பெரும்பாலானோரும் முன்னாள் போராளிகளாவர். இதற்கான எமது பயணங்களின்போது களச்செயற்பாட்டாளர்களுக்கான பணம் (நாட்கூலித் தொகையளவான 1500 ரூபா)இ வாகனத்துக்கான பெற்றோல் செலவுஇ சாப்பாட்டுச் செலவு உட்பட அல்லலுறும் புதிய பயனாளர்களுக்கான உடனடி அன்பளிப்புத் தொகை எல்லாவற்றுக்குமான செலவு (சில இலட்ச ரூபாக்கள்) செயற்குழுவைச் சேர்ந்த மூவராலும் தனிப்பட பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இவையெல்லாம் ஆதரவு.கொம் (aatharavu.com) என்ற இணையத்தில் முழுமையாகத் தொகுக்கப் பட்டுள்ளது. வரவு செலவு கணக்கு விபரங்கள் வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இருந்தபோதும் எமக்கு நிதியாதரவு செய்யும் நண்பர்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கு எமது வேலைமுறைகளை விளக்கமாக முன்வைக்க வேண்டிய கடப்பாடு எம்முன் இருந்ததால்இ 23.06.19 அன்று சூரிச் இல் ஒரு ஒன்றுகூடலைச் சாத்தியமாக்கினோம். அமைப்புஇ அதன் தோற்றம்இ அதன் தொடர் செயற்பாடுகள்இ எதிர்நோக்குகிற சவால்கள் என்பன பற்றி சொன்னோம். அடுத்து காட்சி விளக்கங்களுடன் எமது களச் செயற்பாடும் பயனாளர்களின் (வரையறுக்கப்பட்ட அளவிலான) விபரங்களும்இ பயனாளர்களின் கருத்துரைகளும் காட்டப்பட்டன. அடுத்து வரவு-செலவு குறித்தான விளக்கங்களை முன்வைத்தோம்.

பின்னர் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. அவர்களது ஆலோசனைகள்இ அபிப்பிராயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. எதிர்பார்த்ததை விடவும் அவர்கள் தமது உணர்வுபூர்வமான ஆதரவையும்இ தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதற்கான உத்தரவாதங்களையும் தந்ததோடு “தொடர்ந்து செய்யுங்க” என உற்சாகமுமளித்தனர்.

“ஆதரவு” அமைப்புக்கான உத்தியோகபூர்வ கணக்குப் பதிவை (டிழழம மநநிiபெ) டொச் மொழியில் இலவசமாகவே செய்து தருகிற ருசள என்ற சுவிஸ் நண்பரும் இச் சந்திப்புக்கு வந்திருந்தார். இடைவேளையின்போது அவருடன் தனியாக உரையாட அவகாசமிருந்தது. நிர்வாகச் செலவு இல்லாமல் ஒரு அமைப்பு சுவிசில் கிடையாது எனவும் உங்களது செயற்பாடு தனக்கு வியப்பளிப்பதாகவும் சொன்னார். நிர்வாகச் செலவுகள் இல்லாததால் தான் கணக்குப் பதிவை செய்வதில் இலகுத்தன்மை இருந்ததாகவும் குறிப்பிட்டார். தான் இன்று எமது கள வேலைமுறைகளையும் காட்சியாகப் பார்க்கக் கிடைத்ததுக்கு நன்றியும் சொன்னார்.

சந்திப்பு சுமார் 4 மணித்தியாலங்கள் நடந்தது. மூத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லஇ இரண்டாம் சந்ததியைச் சேர்ந்தவர்களும் இச் சந்திப்பில் பங்குகொண்டது மகிழ்ச்சியைத் தந்தது. இறுதியில் இரவு உணவு பரிமாறல்களுடன் சந்திப்பு நிறைவுபெற்றது. (இந்த நிகழ்வுக்கான முழுச்செலவையும் செயற்குழுவைச் சேர்ந்த மூவரும் பொறுப்பேற்றுக் கொண்டோம்).

ஆதரவு அமைப்பு தொடர்ந்து இயன்றவரை செயற்படும். அதன் வளர்ச்சியை உந்தித் தள்ளுவதில் பங்களிப்பாளர்கள்இ பயனாளர்கள்இ களச் செயற்பாட்டாளர்கள்இ ஆதரவாளர்கள் என எல்லோரினதும் கைகள் தொடர்ந்து இணைந்து இருக்கட்டும்!. புதிய வரவுகள் பலம் சேர்க்கட்டும்!

செயற்குழு 26.06.19

 

FB link :

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Blog Stats

  • 20,815 hits
%d bloggers like this: