பாரிசில் தொன்மைவாய்ந்த அடையாளச்சின்னமான Notre-Dame மாதா கோவில் கட்டடம் எரிந்தது வருத்தத்துக்குரியது. இதே வருந்துதல் பிரெஞ்சு படைகள் உள்ளிட்ட நேற்றோ படைகளும் அமெரிக்காவும் மற்றைய நாடுகளில் செய்த யுத்தத்தில் அழிந்த பள்ளிவாசல்கள் மீதும் ஓதோடொக்ஸ் தேவாலயங்கள் மீதும் வரலாற்றை அகழ்வாய்ந்த பொருட்களினூடாக பதிந்துவைத்திருந்த (ஈராக் உட்பட்ட) மியூசியங்கள் மீதும் எனக்கு இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபர் மசூதியை இந்தியாவில் இந்துவெறியர்கள் தாக்கியழித்தபோதும், தலிபான்கள் ஆப்கானில் பழமைவாய்ந்த பிரமாண்டமான புத்தர்சிலையை இடித்துத் தள்ளியபோதும், தமிழின் தொன்மை வரலாற்றை உள்ளடக்கிய அறிவுக்களஞ்சியமான யாழ் நூல்நிலையத்தை சிங்கள இனவெறியர்கள் எரித்துச் சாம்பலாக்கியபோதும் அதே வருந்துதல் இருக்கவே செய்தது.
செப்ரம்பர் 11 தாக்குதலின்போது பலியாகிய ஆறாயிரம் அமெரிக்க மக்களின்மீதும் வருந்துதல் இருந்தது. அதே அமெரிக்கா உலகம்பூராக பல நாடுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடத்திய யுத்தங்களில்; அழிந்துபோன பல இலட்சம் உயிர்களின்மீதும் அழிக்கப்பட்ட தொன்மைமிகு பண்பாடுகளின்மீதும் அதே வருந்துதல்தான்.
இந்த வருந்துதலை மேற்கத்தைய ஊடகங்களும் மேற்கத்தைய மதிப்பீடுகளும் -தன்னிலை சார்ந்து- எனக்கு கற்றுத்தர இடமளிப்பதாயில்லை.
பாரிஸ் மாதா கோவில் கட்டடத்தின் தொன்மை கட்டடக் கலையின் நுட்பத்தால் மீள நிர்மாணிக்கப்படக் கூடியது. மீளப் பெறமுடியாத தொன்மங்களின் அழிப்பை அழிவை இறுதிவரை தொடர்வது வருந்துதல் மட்டும்தான்.
16042019
FB Link : https://www.facebook.com/ravindran.pa/posts/2724042671000143