சுடுமணல்

கைகொடுத்து தூக்கிவிட வேண்டியிருக்கிறது

Posted on: August 3, 2017

கடந்த யூன் மாதம் எமது “ஆதரவு” உதவி அமைப்பு வேலைக்காக வன்னி சென்றிருந்தோம். மிகக் கடுமையான ஒரு வார காலமாக அமைந்தது அது. நாம் ஏற்கனவே உதவி செய்த குடும்பங்களையும் இப்போ புதிதாக விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டவர்களினதும் இருப்பிடங்களை சென்று பார்த்தோம். பேசினோம்.

உதவிபெற்றவர்களில் 95 சத வீதத்தினரும் தமது சுயதொழிலை தொடங்கியிருந்தமை எமது உழைப்பு சரியாகவே போய்ச் சேர்ந்த திருப்தியைத் தந்தது. இன்னமும் உதவிசெய்யப்பட வேண்டியவர்களை நேரில் சமூகமளித்து நிலைமையை அறிந்துகொண்டதன் மூலம் தெரிவுசெய்துகொண்டிருக்கிறோம்.

சுமார் 75 குடும்பங்களை நாம் நேரில் கண்டு பேசியிருந்தோம். ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றிற்று. (உதவ முன்வருபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். www.aatharavu.com )

* * *

 

 

இந்த படத்தில் உள்ள வீடு மூன்று பெண்குழந்தைகளோடு வாழுகிற ஒரு குடும்பத்தின் வீடு. அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தில் பெற்ற பணத்தில் கட்டிமுடிக்க முடியாமல் போய் அரைகுறையில் இருக்கிற வீடு. எந்த அறுக்கையும் கிடையாது. சுவர்கள் எதுவும் பூசப்படவில்லை. நிலம் பூசப்படவில்லை.வெளிப்புற சுவரிலுள்ள கதவு யன்னல்கள்கூட பூர்த்தியாக்கப்பட முடியாமல் போயிருக்கிறது. குசினியின் புகைக்கூடு வானம் பார்த்தபடியே திறந்திருக்கிறது. கீழேதான் சமைக்கிறார்கள். வீட்டுக்கு மின்சார இணைப்பு எடுக்க வசதியற்றிருக்கிறது இந்தக் குடும்பம். பிள்ளைகள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் படிக்கிறார்கள். கணவர் கூலிவேலை செய்கிறார்.

இந்த வேலைகளைச் செய்து முடிக்க எவளவு செலவாகும் என அந்த ஊர் மேசன் ஒருவருடன் கலந்தாலோசித்தபோது அவர் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபா முடியும் என கணக்கிட்டுத் தந்தார்.

மூன்றுமுக்கிய பிரச்சினைகளை கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது.
1. பெண்பிள்ளைகள் இப்படி அறுக்கையின்றி இருப்பதும் இரவில் தூங்குவதும் உடன் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
2. மழைகாலத்தில் புகைக்கூட்டுக்குள்ளால் மழைநீர் வீட்டுக்குள் வருவதால் ஏற்படுகிற மோசமான நிலைமை.
3.பிள்ளைகள் படிப்பதற்கான சூழல் இல்லாமை.

அவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட வேண்டியிருக்கிறது.

*

( ஆதரவு அமைப்பு சார்பில் எழுதிய பதிவு இது.)

 

* * *

இது எனது முகநூலில் 3.8.17 அன்று வெளியான பதிவு. இதைக் கண்டதும் நண்பன் ரவிசங்கர் (.லண்டன்) இந்த வீட்டை பூர்த்திசெய்வதற்கான முழுத் தொகையையும் (1000 பவுண்ட்ஸ்) தர முன்வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. முழுவதும் பூர்த்தியானதும் அதன் நிழற்படம் இங்கு பிரசுரிக்கப்படும். .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

  • 22,211 hits
%d bloggers like this: