ஒரு (மேற்குலக) அகதியின் மனநிலையை புரிந்துகொள்வதற்கு அகதியாக இருந்தால்தான் சாத்தியமா என எண்ணத்தோன்றுகிறது. அகதிவாழ்வை ஒரு வெறும் இடப்பெயர்வாக (அல்லது ஒரு பயணமாக) மட்டும் நோக்குகிற எளிமையான போக்கு சமூக ஆய்வாளர்களாக இருக்கிற தகுதியை ஒருவருக்கு இல்லாமலாக்கிவிடக் கூடியது.
அது ஏற்படுத்திவிடுகிற சமூகவேர்ச் சிக்கல்களையும் அதை இரண்டாம் சந்ததியினூடாக அனுபவிக்கிற பதட்டப்படுகிற மூத்த தலைமுறையின் உளவியலையும்இ இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையில் அகப்பட்டுத் தவிக்கும் இரண்டாம் சந்ததியையும்இ நிறவொதுக்கலின் உளவியலையும்இ மொழிவழி சிக்கல்களையும் புரிந்துகொள்ள முனையும் எந்த சமூக ஆய்வாளரும் தாம் முந்திரிக்கொட்டையாய்ப் பேசுவதைவிடவும் கேட்டுப்பெற வேண்டியவைதான் அதிகம் என்பேன்.
இந்த மண்ணில் வேரூன்றிஇ இந்த நாட்டு மொழியே சிந்தனை மொழியாகவும்இ தமிழ் தொடர்புமொழியாகவும் ஆகிவிட்ட சந்ததியை பெயர்த்துக்கொண்டு இலங்கையில் இருத்த முனைவதில் இன்னொரு அகதித்தன்மை உருவாக்கப்படுகிறது என்பதையாவது புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒரு தனிமனிதஜீவியின் தனித்தன்மைக்குள்ளும் தன்னிலைக்குள்ளும் (pசiஎயஉல) எளிமையாகவே உரிமையெடுத்து மூக்குநுழைக்கிறஇ காவிக்கொண்டுவரப்பட்ட ஒரு கலாச்சாரம் இரண்டாம் சந்ததியை எரிச்சலூட்டுவதை ஒவ்வொரு குடும்பமும் அனுபவிக்கிறது.
ஒப்பீட்டளவில் தமது சுயத்தை கண்டடைந்திருக்கும் பெண்பிள்ளையாக இந்த நாட்டில் நடமாடுகிற பரந்த வெளியிலிருந்து கிளம்பி கூண்டுக்குள் அடைத்துவிடுகிற ஒரு கலாச்சார வெளிக்குள் பறந்துவந்து அவர்களாக உள்ளே வந்து இருக்கவா போகிறார்கள்.
காசுகாய்க்கிற மரமாக புகலிடத் தமிழரை காணுகிற ஊர்மனதுக்கு அதையும் தாண்டியுள்ள விசயங்கள் பிடிபடுவதேயில்லை. இதை பயன்படுத்தி புகலிட ஜீவி தனது எல்லா இயலாமைகளையும் புரியாத உணர்வுச்சிக்கல்களையும் பவுசுக்குள் அமுக்கி உலவிக்காட்டிவிட்டு இங்கு வருகிறான்ஃள். வந்தபின் ஒரு வேலை இரண்டு வேலை மூன்று வேலை என ஓடவேண்டியதுதான்.
கள்ளுக்குடிக்க இலங்கைக்கு ஓடுகிற இலக்கியவாதிக்கும்இ அம்மாவின் மடியில் தலைவைத்து படுத்துப் பார்க்கிற மகனுக்கும் மகளுக்கும்இ மாங்காய்க்கு உப்புப் போட்டு சாப்பிட விழைகிற ருசியாசைக்கும்இ தொட்டாற் சுருங்கி செடியை தட்டிவிளையாடுகிற முத்தல் வயதுகாரருக்கும் உள்நின்று நகர்த்துகிற ஆன்மாவின் ஏக்கம்தான் என்ன.
சமூகவியல் ரீதியில் உளவியல் ரீதியில் பார்க்கப்பட வேண்டிய பிரச்சினை இது. அது புகலிடத்து இலக்கியர்களிடமிருந்துஇ சமூக ஆய்வாளர்களிடமிருந்து சரியாக அல்லது போதியளவு வெளிப்படுத்தப்படவில்லை அல்லது உணர்ந்துகொள்ளப்படவில்லை என்பேன். புகலிட இலக்கியம் அதன் அர்த்தத்தில் -மேடைபோட்டு கத்துவதற்கு அப்பால்- அதன் முழுப் பரிமாணத்தில் வந்ததாக கொண்டாட முடியவில்லை. பெரும்பாலும் அவர்கள் புகலிடத்திலிருந்து ஊருக்கு கவண் எறிந்துகொண்டிருக்கிறார்கள்.
20072017