(A reply to Balan Tholar review.)
ஜெசிக்கா, விபூசிகா என அருகருகே வைத்தெல்லாம் பேசவேண்டிய நியாயம் எனக்குப் பிடிபடுதில்லை. இருவரும் சிறுமிகள் என்ற ஒரே தளமா அல்லது ஜெசிக்காவின் பாடலின் வரிகள் எடுத்துவரும் செய்தியா எதுவென தெளிவாகத் தெரியவில்லை.
தனது அண்ணனைத் தேடிய விபூசிகாவின் குரல் ஒரு மனித உரிமைக் குரல். அவளது செயற்பாடு மனித உரிமை அரசியல். அவளுக்காக குரல் கொடுப்பதற்கு எந்த முன்நிபந்தனையோ பின்நிபந்தனையோ தேவையில்லை. அவள் அனுபவிக்கும் சிறைவாழ்வின் துயரை அவளது குரலை ஜெசிக்கா அலை பறித்துப் போய்விடும் என்றெல்லாம் நினைக்க என்ன இருக்கிறது. சுப்பர் சிங்கர் அலை எழும் வேகத்தில் ஓய்ந்தே போய்விடும்.
விபூசிகாவின் மீது இழைக்கப்படும் அநீதி மீதான தார்மீகக் கோபம் அல்லது அக்கறை அவளது விடுதலை வரை ஓயப்போவதில்லை. இதை அது ஒருபோதும் அடித்துச் செல்லப் போவதில்லை. அப்படி நாம் பதட்டப்படுவது அர்த்தமற்றது.
அதற்கு வாக்குப் போட்டவர்கள் எல்லாம் இதுக்கும் வாங்கோ என கேட்பதை அரசியல் சமூகவியல் ரீதியில் விளக்குங்கள் பார்க்கலாம். சினிமாப் படங்கள் குறுந்திரைகள் பாடல்கள் நடனங்கள் என்றெல்லாம் (தமிழ் உணர்வாளர்கள் உட்பட) பலரும் பார்த்து இரசிப்பதில்லையா? வாக்குப் போடுதல்தான் பிரச்சினையா?
எப்போதுமே ஒரு ஒப்பீட்டு மனநிலை அல்லது கிளித்தட்டு மனநிலை எமது விமர்சன அணுகுமுறைக்குள் புகுந்துவிளையாடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுகொள்வதில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. இவ் வகை மனநிலை இளசுகளின்; உலகை அவர்கள் வெளிப்படுத்தவேண்டிய பல்வகை போக்குகளை மறுப்பதாகவே இருக்கும், நாம் அதை விரும்பாமல் இருந்தும்கூட !
சுப்பர் சிங்கர் போட்டியில் பாடி தனது திறமையைக் காட்டிய ஜெசிக்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தயக்கம் கொள்ள என்ன இருக்கிறது. அவரது பாடலை தமிழ்த் தேசியவெறியர்கள் கொண்டாடலாம். தமிழ்மக்களின் துயரை மீண்டுமொருமுறை அவளது குரல் எடுத்துச் சென்றதால் தேசியவெறி வியாபாரத்துக்கு அது உகந்ததாகப் படலாம். அதற்காக நாம் சைற் எடுத்து மல்லுக்கட்ட வேண்டியதில்லை. அந்தத் துயர் எடுத்துச் செல்லப்படுதலை தமிழராக மட்டுமன்றி, போருக்கு எதிரான (அரசியல்) மனிதஜீவியாக நின்று ஏற்றுக்கொள்வதை எந்தக் கோட்பாடு கோதாரியை வைத்து மறுக்கப் போகிறோம்.
அவளிடம் திறமை இருக்கிறது. அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்தவகை வசதியற்று இலைமறை காயாய் எத்தனையோ பேர் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அற்று இருக்கிறார்கள் என்ற உண்மை ஜெசிக்காவின் திறமையை மறுக்க அல்லது நொதுமலாக்க போதுமானதல்ல. மறுவளமாய் அந்த உண்மையை பொத்திப்பிடிக்க ஜெசிக்காவின் குரலாலும் முடியாது. அதை அவள் தன்னும் மறுத்துவிடவா போகிறாள்.
fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/854458364625259?pnref=story
* * *
Balan Tholar’s review.
“• ஜெசிக்காவுக்காக வாக்கு போட்டவர்கள்
விபுசிகாவிற்காக குரல் கொடுப்பார்களா?விஜய் டிவி பாட்டுப்போட்டியில் ஜெசிக்காவின் வெற்றிக்காக உழைத்த புலம்பெயர் தமிழர்கள் அதே உணர்வுடன் சிறுமி விபுசிகாவுக்காகவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
யாருமற்ற அந்த சிறுமி விபுசிகா மீண்டும் தன் தாயாருடன் சேர்ந்து வாழ அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
பல நாட்களாக எந்த வித வழக்கும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விபுசிகாவின் தாயார் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
விபுசிகாவின் தாயார் மட்டுமல்ல அடைத்து வைக்கப்ட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதற்காக தமிழ் மக்கள அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
• சிராணிக்கு மீண்டும் தலைமை நீதிபதி பதவியை அளித்த அரசு
பதவி நீக்கப்ட்ட தளபதிகளுக்கு மீண்டும் பதவி வழங்கிய அரசு
சிறையில் உள்ள தமிழர்களை மட்டும் விடுதலை செய்ய மறுக்கிறது!• அலரி மாளிகையில் பணத்தைக் கண்டு பிடித்தவர்களுக்கு
மறைத்து வைக்கப்பட்டிருந்த விமானத்தை கண்டு பிடித்தவர்களுக்கு
மகிந்தவின் விலையுயர்ந்த வாகனத்தைக் கண்டு பிடித்தவர்களுக்கு
கோத்தபாயாவின் ஆயுதக் களஞ்சியத்தை கண்டு பிடித்தவர்களுக்கு
நாமல் ராஜபக்சவின் விலையுயர்ந்த கடிகாரங்களை கண்டு பிடித்தவர்களுக்கு
தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லையா?• மகிந்தவின் இனவாத பாதையிலேயே மைத்திரியும் செல்கிறார்.
இந்தியா எப்போதும் இலங்கை அரசை ஆதரிக்கிறது.
இவர்களை எல்லாம் நம்பி தமிழினம் அழிகிறது!”
Balan tholar
• ஜெசிக்காவுக்காக வாக்கு போட்டவர்கள்

இவர்களை எல்லாம் நம்பி தமிழினம் அழிகிறது!