தமிழ் பேசும் மக்களின் எல்லாப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தாத (எல்லா இயக்கங்களினதும்) போராட்டத்தை தமிழ் மக்களின் போராட்டம் என்றுதான் அழைத்தோம். தமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தாத கிரிக்கெட் அணியினை இலங்கை அணி என்று அழைக்கிறோம்.
நான் ஓர் இலங்கைப் பிரசை… அது சிங்கள மக்களினது மட்டுமல்ல, தமிழ்மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் மலையக மக்களினதும் நாடு. அந்த உரிமையை நாம்விட்டுக்கொடுக்க முடியுமா என்ன.
அரசியலை ஒரு சமூக விஞ்ஞானமாகப் புரிந்துகொண்டால், விளையாட்டையும் அது நனைத்துத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள என்ன கஸ்டம் இருக்கிறது.
தமிழீழத்தை தீர்வாகவும், அடையப்படாத அந்த நிலப்பரப்பை தமது நாடாகவும் ஒருவர் சொல்வதற்கான விருப்பை புரிந்துகொள்ள முடியுமெனின், இலங்கைதான் தனது நாடாக இன்னொருவர் சொல்வதனையும் புரிந்துகொள்ள எது தடைசெய்கிறது? தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பா என்ன?.
நாடற்றவராக நின்றுகொண்டு உரிமைக்காகப் போராடுவது எங்ஙனம் என்பது பிடிபடாததாகவே எனக்குத் தோன்றுகிறது.
வெளிநாட்டு பிரசாவுரிமையை எடுத்த பின்னரும் குண்டிமண்ணை தட்டிவிடுவதுபோல் செய்துவிட்டுப் போக முடியாமல் அவதியுறும் மனதுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறோம். ஒருவேளை இலங்கையில் எமது உறவுகள் இருப்பதால்தான் என்றால், அந்த உறவுகளின் நாடு எது? யதார்த்தத்தில் அவர்கள் வாழும் நாடு இலங்கையன்றி வேறு என்ன?.
வாங்கிலே அரக்கி அரக்கி… கடைசியில் தள்ளிவிழுத்தும் வெறியோடு செயலுறும் ஒருவருக்காக, இருந்த வாங்கை விட்டுக் கொடுப்பது வெறியர்களின் நோக்கத்துக்கு பலியானதாகவே அர்த்தப்படும்.
காலனி பிடித்து ஆசிய ஆபிரிக்க நாடுகளையெல்லாம் ஒட்டச் சுரண்டி, பிரச்சினைகளை உருவாக்கி, களவெடுத்து, “நாகரிகம்” படிப்பித்து, இன்று போர் வியாபாரிகளாக இருக்கின்ற வெள்ளையின நாட்டவர்களின் விளையாட்டு அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், கத்திக்குளறவும் முடியுமெனின்…
இது ஏன் முடியாதாம்!
ஓர் இலங்கையன் என்ற ரீதியில் இலங்கை கிரிக்கட் அணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்!
fb link :