போரறிந்த சமாதானம்

போர் கவிழ்ந்த எமது தேசத்தில்
தளபதிகள் உருவாயினர்
தத்துவவாதிகள் தோன்ற மறந்தனர் அல்லது
மறுக்கப்பட்டனர்.
வரலாற்றை
போராட்டம் நகர்த்திச் சென்றது
ஆனாலும் நாம்
அனுபவங்களும் சிந்தனைகளும்
சேர்ந்து நடக்க
தடைவிதித்தோம்.


மலிவாய் நாலு வார்த்தைகளுடனே
வந்துவந்து
செல்கிறான் என் சகோதரன்
அழிவுகளின் பின்னான உயிர்ப்பொன்று
இருக்குமெனின்,
அழிவை நாம்
சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறான் என்
நண்பன்.

இறந்துபோன இராணுவத்தினனின் கணக்கை
ஓயாது கரைகிறது என் முற்றத்தில்
தமிழ் வானொலி.
இந்தக் கரைவினிடை,
இரவோடு இரவாய் காணாமல் போனோர்
கொலைசெய்யப்பட்டோர் தொகை
தொடர்ந்தும்
காணாமலே போய்க் கொண்டிருந்தது –
காரணமும்கூட.
இனந்தொ¤யாதோர் என்ற சொல்
மீண்டும் மீண்டும்
கொலைஞர்களின் ஆடையாகிறது.

மனிதாபிமானத்துக்கு எல்லைகள்
வரையப்பட்ட தேசமொன்றில்
அனாதையாய்ப்போன குழந்தைக்கு
கூடமைக்கவும்
அனுமதி கேட்கவேண்டியதாயிற்று.

கேள்விகேட்கப்பட முடியாத போராட்டம்
துறவியிலும் தொற்றிய இனவெறி
இதனிடை நாம்
சமாதானத்துக்காகப்
பயணித்தோம் மூன்றாம் தரப்பின் வாகனத்தில்.
உலகமெலாம் துப்பாக்கி உழவில்
’ஐனநாயகத்தை’ விதைக்கும்
மாமல்லர்களும் மூக்கை
நுழைத்தாயிற்று
இனி என்ன
காத்திருப்போம்
காத்திருப்போம் கால எல்லையின்றி.

சமாதானம்
போரின் இறப்பை மட்டுமே
இலக்கு வைக்குமெனினும் அதுவாய்
வருக.
யுத்தக் களையில் மூச்சிரைக்கும் ஐ¦விக்கு
சுவாசக் காற்றை கொண்டு வருக.
தேய்ந்து நாம்
கட்டெறும்பான கதையின் பின்னரும்
பொரித்துக் கொள்வோம்.

-ரவி (050803)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: