துடைப்பதற்கு ஆளின்றி
கண்ணீர்
அழுகி மணக்கிறது.
செட்டை பெயர்ந்த வடுக்களாய்
விரியும்
மணற்கங்குப் பாலைவன மனிதர்கள் நாம்.
மூளை முக்கி
பிரசவத்திற்காய் துடிக்கையிலே
களம் தேடும் மனிதர்களே!
பேனா புண்டு மையொழுக
எழுதிக் குவித்திடுங்கள்-
உங்கள் வலிதீர.
ஒரு கூர்முனையாய் நுண்ணியதாய்
தெரிந்தும் தெரியாமலும்
முளைத்துநின்று
சிறுபோகம் கொள்ளுங்கள்.
எழுத்துக்கள் கொல்வது
ஓர் உணர்வுள்ள ஜீவியைத்தான்-
உங்களையல்ல.
அதிகாரத்துவத்தின் சட்டைப்பையில் ஒரு பேனாவாக
முடிந்தால், ஒரு புன்முறுவலாக
உங்களை கரைத்துக் கொள்ளுங்கள்.
மைப+சி
எடுப்பெடுத்து
|அழகு| நக்கும் முகம்போல
நாறுகிறது
|அறிவு| நக்கும் உங்கள் மூளை.
எழுத்துக்களை சிதைத்து ஒட்டும்
தொழில்நுட்பம்
யுத்தப் பட்ட மக்களுக்கு தீன்போடாது!
-ரவி (Aug.2000)